அவர் ஆண்டவர் இல்லை...பிரதீப்பால பயந்துட்டாரு...!! வனிதா அதிரடி!!
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து வரும் வனிதா, கடந்த வாரம் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரதீப் ஆண்டனியின் விவகாரம் பெரும் விவாதங்களை சமூகவலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவரை தேவையில்லாமல் வெளியேறி விட்டார்கள் என பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து தொகுப்பாளர் கமலஹாசனை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கின்றனர்.
வழக்கம் போல இந்த வாரமும் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் இது குறித்து பேசியது வருமாறு, “வெளியே போனவன் போனவன் தான் என பிரதீப் பற்றி கூறி, இத வெச்சி ட்விட்டரில் டிராமாவெல்லாம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், சோசியல் மீடியாவில் வந்த கருத்துக்கள் வீட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்தது என்ற வனிதா, இந்த பிரச்சினை குறித்து ஆண்டவர் பேசுவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் இருந்தது என்றும் நல்ல வேளையாக அவர் பேசினார் என சுட்டிக்காட்டினார்.
பிரதீப் விவகாரத்தை கையாண்டதில் கமலுக்கு பயம் இருந்தது தெரிந்தது என குறிப்பிட்ட வனிதா, காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்ப்பது வேறு. போட்டியாளராக உள்ளிருந்து கவனிப்பது வேறு என்று கூறி, வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களால் அனைத்தையும் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்றார்.
மேலும், சோசியல் மீடியா கொடுத்த அழுத்தம் கமல் சார் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட வனிதா அவர் ஆண்டவர் இல்லை, அவரும் ஒரு சாதாரண மனிதர் தானே என்றார்.