இருட்டு'ல லிப்லாக்...பாத்ரூம்'ல கொஞ்சல்..!! கமல் வெளிய சொல்லணும்..!! போட்டுடைத்த கஸ்தூரி!!
பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கஸ்தூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீடு
இந்த சீசன் பிக் பாஸ் சீசன் எப்போதும் இல்லாத போது பெரும் பரபரப்பாக உள்ளது. பிரதீப் ஆண்டனி விவகாரம் குறித்து ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பலரும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலை கூட கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நடிகையும் முன்னாள் போட்டியாளரான கஸ்தூரி தனது கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பிரதீப் மகாத்மாவும் கிடையாது, மாயா பூர்ணிமாலாம் அன்னை தெரசாவும் கிடையாது என்ற கஸ்தூரி, பிக்பாஸில் காட்டும் சண்டையில் பாதி உண்மை இருக்கும் பாதி பொய் இருக்கும் என்றார்.
அங்கு நடக்கும் என்டர்டெயின்மென்டை மக்களுக்கு காட்டமாட்டார்கள் என கூறிய கஸ்தூரி, அதை கமல் மட்டுமே பார்த்திருப்பார் என்று கூறி, ஆனால் கமல் பார்த்ததை வெளியே சொல்ல மாட்டார் என்றும் வெளியே சொன்னால் எல்லாருக்கும் ஆப்பு ஆகிடும் என்றார்.
அதெல்லாம் காட்டவில்லை
மேலும், ஒரு பெண்ணை வர்ணிக்கிறது தவறே இல்லை என்று தனது கருத்தை தெரிவித்த கஸ்தூரி, ஆனால் வேலைக்காரி மாதிரி இருக்கா? என உங்க வீட்டு பெண்ணை பார்த்து கூட சொல்லக் கூடாது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், யார் யார லவ் பண்ணனும் என அனைவரும் முடிவோட இருக்காங்க என்று கூறி, இன்னும் இருட்டுல லிப் லாக் கொடுக்குறது, பாத்ரூமில் கொஞ்சுறது இதெல்லாமதான் காட்டலையே என்று கூறி மாயாவ பத்தி தனக்கு முதலேயே தெரியும் என்று கூறி, ஆனாலும் முதலில் மாயா கேங்குல தான் பிரதீப் இருந்தாரு என்று சுட்டிக்காட்டினார்.
பிரதீப் செய்த காரியம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தலை அவரது பெற்றோரையும் சேர்த்துதான் அசிங்கப்படுத்திவிட்டன என்ற கஸ்தூரி, அது அவருக்கு புரியவில்லை என்று சுட்டிக்காட்டி, அத்துடன் மாயா தனது உள்ளாடையை எடுத்து நிக்சனுக்கு காட்டிட்டு இது சும்மா காமெடிக்கு என சொல்லிவிட்டு போறாங்க, ஆனால் அத கமல் சார் தட்டி கேட்கலை என்றார்.