வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம்? வைரல் ஃபோட்டோ!
ரபார்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வனிதா-ரபார்ட்
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பின், அநீதி படத்தில் நடித்தார். தொடர்ந்து, பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்.
திருமணம்?
இதற்கிடையில், முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் அதிலிருந்து வெளியே வந்தார். அவர் அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.
அதில் Save The Date October 5 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்களா? இல்லை திரைப்பட பிரோமஷனா என குழம்பி வருகின்றனர்.