அன்று எனக்கு பீரியட்ஸ்..அதனால்தான் - விமர்சனங்களை விளாசிய வாணி போஜன்!
தனது மீது எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை வாணி போஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
வாணி போஜன்
ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்த தடர் தமிழ் ராக்கர்ஸ்.
இத்தொடர் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் புரோமோஷனில் கலந்து கொண்ட வாணி போஜனை பார்த்த பலர் அவரது முகம் வீங்கியுள்ளது பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பாரோ, மிகவும் வயதாகிவிட்டது.
விமர்சனங்களுக்கு பதிலடி
அவர் அணிந்து வந்த கருப்பு சேலையில் கவர்ச்சியாக இருந்தார் என்று பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து, வாணி போஜன் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில்,
அன்று தனக்கு பீரியட்ஸ் என்றும் அதனால் முதலில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயங்கியதாகவும் பின்னர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றதால்தான் அதில் பங்கேற்றதாகவும் வாணி கூறியுள்ளார்.
மகான் - மகிழ்ச்சி
அந்த சமயத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படித்தான் அன்று என் முகம் வீங்கியது போல் தோற்றமளித்தது. பொதுவாக நடிகைகள் என்றாலே கவர்ச்சியாகத்தான் பார்ப்பார்கள். அப்படி இருக்கையில் முழுதாக போர்த்திக் கொண்டு சேலை அணிந்து வந்தாலும் ஹாட் பிக்ஸ் என்று டேக் கொடுத்து புகைப்படங்களை பதிவேற்றுவார்கள்.
அது மட்டுமின்றி வேறு ஏதாவது இணையதளங்களில் கூட தவறான கண்ணோட்டங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவார்கள். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து நடிகைகளுக்குமே நடக்கும்.
அதனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் காரணத்தால் வாணி போஜன் நடித்த மகான் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டது. இருப்பினும் டெலிட்டட் சீன்ஸாக வெளியானது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறியுள்ளார்.