காதலை முடித்துக்கொண்ட பரத்-வாணி போஜன் ஜோடி - இணையத்தில் வைரலாகும் இயக்குனரின் மெசஜ்

Bharath Vani Bhojan
By Swetha Subash May 22, 2022 11:26 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

அறிமுக இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் நடிகர் பரத் தனது 50-வது படமான ‘காதல்’என்ற படத்தில் நடிகை வாணி போஜனுடன் இணைந்து நடித்துள்ளார்.

திரில்லர் படமான ‘காதல்’படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அண்மையில் வெளியிட்டார்.

காதலை முடித்துக்கொண்ட பரத்-வாணி போஜன் ஜோடி - இணையத்தில் வைரலாகும் இயக்குனரின் மெசஜ் | Love Shooting Comes To End Crew Announces

இந்த படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், வாணி போஜன்- பரத் நடித்துள்ள ‘காதல்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது.

இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை, படத்தின் இயக்குநர் ஆர்.பி.பாலா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துளளார். அதில், “LOVE” படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.