அட்ஜெஸ்ட் பண்றதை வீடியோ எடுத்து ஆபாசமா பாக்குறாங்க - பொங்கிய வானி போஜன்!
ட்ரோல்கள் மற்றும் அப்யூஸ் குறித்து நடிகை வானி போஜன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
வானி போஜன்
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை தொடர்ந்து செங்களம் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில், சும்மா நிகழ்ச்சிகளில் ஒரு சேலையை சரி செய்தாலும், அதனை ஜூம் செய்து வீடியோவாக எடுத்துப் போட்டு ஆபாச கமெண்ட்டுகளை அடிக்கும் விஷமிகளும் உள்ளனர்.
அப்யூஸ்
ஆனால், அவர்களை எல்லாம் அப்படியே கடந்து செல்ல வேண்டும் நாமும் அவர்களுக்கு இணையாக இறங்கி அப்யூஸ் கமெண்ட்டுகளை போட்டுக் கொண்டால் நாம் சந்தோஷமாகவே இருக்க முடியாது. சினிமாவில் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் பார்த்து விட்டேன்.
ஒவ்வொரு புதிய படங்கள் வெளியாகும் போது, அப்போது சந்தோஷமாக இருக்கும். அந்த படம் ஓடுகிறதோ, இல்லையோ அந்த தருணம் மகிழ்ச்சியான தருணம் தான். தொடர்ந்து உழைக்கவும் இந்த வாழ்க்கை நம்மை எங்கே தான் கொண்டு செல்கிறது என்பதை பார்த்து விடலாம் என அப்படியே சென்றுக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.