அதனால் தான் பேச்சுலர் படத்தில் நடிக்கவில்லை - ரகசியம் உடைத்த வாணி போஜன்

Vani Bhojan Tamil Cinema
By Sumathi Apr 10, 2023 08:20 AM GMT
Report

பேச்சுலர் படத்தில் தான் விலகியது குறித்து வாணி போஜன் தகவல் பகிர்ந்துள்ளார்.

வாணி போஜன் 

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை தொடர்ந்து செங்களம் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

அதனால் தான் பேச்சுலர் படத்தில் நடிக்கவில்லை - ரகசியம் உடைத்த வாணி போஜன் | Vani Bhojan Opens Up About Bachelor Movie

இதற்கிடையில் நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், லிவ் இனில் இருப்பதாகவும் செய்திகள் பரவியது. அதற்கு வாணி மறுப்பும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,

விலகல்

பேச்சுலர் படத்தில் முதலில் ஜி.வி.பிரகாஷுடன் நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால், படத்தில் ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் வரும். சீரியல் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த என்னை இது போன்ற காட்சிகளில் நடித்தால் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்களா?

அதனால் தான் பேச்சுலர் படத்தில் நடிக்கவில்லை - ரகசியம் உடைத்த வாணி போஜன் | Vani Bhojan Opens Up About Bachelor Movie

என்ற பயம் வந்தது. அதேசமயம் தனக்காக படத்திற்கு தேவையான நெருக்கமான காட்சிகளையும் மாற்றி அமைக்கக்கூடாது என்று யோசி விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.