VTV படத்தில் வந்த சான்ஸ் - அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் நடிக்கணுமா..? வாணி போஜன் வேதனை
சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் வாய்ப்பை தவறவிட்டதை குறித்து வாணி போஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வாணி போஜன்
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தெலுங்கில், 2019-ஆம் ஆண்டு மீக்கு மாத்திரமே செப்தா படத்தின் மூலம் படங்களில் அறிமுகமாகினார். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வாணி போஜன், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக மாறினார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெற்ற "மகான்" படத்திலும் வாணி நடித்திருந்தார். தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் என வரிசையாக படங்களில் நடித்தவருக்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை.

அண்மையில் தான் இவர், ட்ரிப்பிள்ஸ் செங்களம், தமிழ் ராக்கர்ஸ் என வெப்சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். செங்களம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சூழலில் தான், வாணி போஜனின் பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகிறது.
அட்ஜஸ்ட்மென்ட் செய்து
அந்த பேட்டியில், தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு பிரபல நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது,

தான் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்துக்கொண்டு இருந்ததாக குறிப்பிட்டு, அந்த சமயத்தில் இருப்பதை விட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம் என்று அவரது தாயார் கூறியதன் காரணமாக, அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி! IBC Tamil