படுக்கையறை காட்சிக்கு அதுதான் முக்கியம்; பணம் தேவையில்ல - வாணி போஜன் ஓபன்டாக்!

Vani Bhojan Tamil Cinema
By Sumathi Nov 06, 2023 02:30 PM GMT
Report

படுக்கையறை காட்சி குறித்து வாணி போஜன் பல தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

வாணி போஜன்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

vani bhojan

பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை தொடர்ந்து செங்களம் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

படுக்கையறை காட்சி

இந்நிலையில், பேட்டி ஒன்றில் திரைப்படங்களில் கதைக்கு தேவை இல்லாமல் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகிறதா? எனக் கேட்ட கேள்விக்கு, செங்கலம் பற்றிய கதையை சொல்லும்போது இதில் படுக்கையறை காட்சி இருப்பதை கூறாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அது போன்று ஒரு காட்சி இருப்பதை கூறினார்கள்.

படுக்கையறை காட்சிக்கு அதுதான் முக்கியம்; பணம் தேவையில்ல - வாணி போஜன் ஓபன்டாக்! | Vani Bhojan About Bed Scenes In Movies

அதுமட்டுமல்லாமல் நான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடம் இந்த கதைக்கும் படுக்கை அறை காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்காக மசாலாவாக இதை சேர்க்க வேண்டும் என்று கேட்க அவர்கள் அந்த காட்சியை கைவிட்டு ஷூட்டிங் எடுத்து முடித்தார்கள்.

அன்று எனக்கு பீரியட்ஸ்..அதனால்தான் - விமர்சனங்களை விளாசிய வாணி போஜன்!

அன்று எனக்கு பீரியட்ஸ்..அதனால்தான் - விமர்சனங்களை விளாசிய வாணி போஜன்!

என்னைப் பொறுத்தவரை படத்திற்கும், கதைக்கும் தேவை என்றால் தான் அது போன்ற காட்சிகள் இடம் பெற வேண்டும், தேவை இல்லாமல் இடம் பெறுவது அனாவசியம். நடிப்பில் எப்போதும் கேரக்டர் முக்கியம் என்று நான் கருதுகிறேன். கதைக்கு ஏற்ற படி அந்த கேரக்டர் இருக்க வேண்டும். எனவே எனக்கு பணம் முக்கியம் அல்ல கேரக்டரே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.