அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிதான் ஹீரோயின்.? லிவ் இன் ரிலேஷன்ஷிப் - மனம் திறந்த வாணி போஜன்!

Vani Bhojan
By Sumathi Sep 20, 2023 05:30 PM GMT
Report

தான் கடந்து வந்த அனுபவங்கள் குறித்து நடிகை வானி போஜன் மனம் திறந்துள்ளார்.

வானி போஜன்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிதான் ஹீரோயின்.? லிவ் இன் ரிலேஷன்ஷிப் - மனம் திறந்த வாணி போஜன்! | Vani Bhojan Interview About Adjustment

பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை தொடர்ந்து செங்களம் வெப்சீரிஸில் நடித்துள்ளார். இந்நிலையில், சினிமாத்துறை குறித்து பேசியுள்ள இவர்,

அட்ஜெஸ்ட்மெண்ட்

“ஒரு பெண்ணாக நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த விஷயம் வருவதை தவிர்க்க முடியாது. நான் புடவை கட்டி வந்தாலும் கூட, என்னுடைய போட்டோ எப்படியாவது ஒரு சைட்டில் ஹாட் என்று போட்டு இருக்கும். இன்ஸ்டாகிராமில் நான் முழுவதுமாக போர்த்திக்கொண்டிருந்தாலும் கூட தேவையில்லாத இடத்தில் அந்த மாதிரியான புகைப்படங்கள் இருக்கும்.

அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிதான் ஹீரோயின்.? லிவ் இன் ரிலேஷன்ஷிப் - மனம் திறந்த வாணி போஜன்! | Vani Bhojan Interview About Adjustment

திரைப்படங்களில் வந்த போது உடன் நடிக்கும் நடிகர்களோடு சேர்த்து வைத்து வாணிபோஜன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று சொல்வார்கள். பொண்ணுங்க வேலைக்கு போகும் போது என்னடா.. பொண்ண சம்பாதிக்க வச்சு நீங்க சாப்பிடுறீங்க என்ற பேச்சு இயல்பாக எழும்.

நானே வந்ததினால் என்னுடைய விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று மிகவும் யோசிப்பேன். அப்படி அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து நான் பெரிய கதாநாயகி ஆகவேண்டும் என்று அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.