வந்தாச்சு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்; இவ்வளவு வசதியா? வெளியான அசத்தல் வீடியோ!
வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வந்தே பாரத்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கான பணி மும்முரமாக நடந்து வருகிறது. கட்டுமானம் முடிந்ததும் திருநெல்வேலி ரயிலில் ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, வந்தே பாரத் யில்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது.
தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்லீப்பர் சேவை
அதில், மேல் பெர்த்தில் ஏறுவதற்கு வித்தியாசமான படிகள். கம்பிகள் இல்லாமல் அழகான படிகள் இடம்பெற்றுள்ளது. தானியங்கி கதவுகள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் கேபின் விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் கேபின் விளக்குகள் கொண்டு வரப்பட உள்ளன.
? Vande Bharat train sleeper coach render. (? - tg situ) pic.twitter.com/8ibk6FWsic
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 15, 2023
குறைவான ஜெர்க் மற்றும் சத்தம் கொண்டவை. உள்ளே இருக்கும் போது பயணிப்பதே தெரியாத அளவிற்கு நவீனமான பயணம் இருக்கும். Vacuum கழிப்பறைகள், டிஜிட்டல் கதவுகள் இருக்கும். இதனால் கழிப்பறை சுத்தமாக இருக்கும். சீட்டுகளை திறக்கும் பெர்த் வசதி புதுமையாக இருக்கும். இதனால், அதிக இடவசதி இருக்கும் என 5 வசதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.