சர்வதேச தரத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் - புகைப்படங்கள் வைரல்!

Viral Photos Indian Railways
By Sumathi Oct 19, 2025 07:41 AM GMT
Report

வந்தே பாரத் ஸ்லீப்பர் ஃபர்ஸ்ட் லுக் படங்கள் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் 

வந்தே பாரத் ரயில், 700 முதல் 1,200 கி.மீ.க்கு மேல் செல்லும் நீண்ட பயணங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

vande bharath

இந்த ரயில் 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும். 11 ஏ.சி. 3-டயர் பெட்டிகள், 4 ஏ.சி. 2-டயர் பெட்டிகள் மற்றும் 1 ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி இருக்கும். சுமார் 1,128 பயணிகள் இதில் பயணிக்க முடியும். விரிவான படுக்கைகள், எளிதான படிக்கட்டுகள், மற்றும் நவீன உள்ளமைப்புகள் மூலம் பயணிகளின் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்தில் பற்றி எரிந்த தீ - 20 பேர் உடல் கருகி பலி!

பேருந்தில் பற்றி எரிந்த தீ - 20 பேர் உடல் கருகி பலி!

புகைப்படங்கள் வெளியீடு

அனைத்து பெட்டிகளும் முழு ஏ.சி. வசதி கொண்டவை. சென்சார் அடிப்படையிலான விளக்குகள், வைஃபை, யூ.எஸ்.பி. சார்ஜிங் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகளும் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது.

பொதுவாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறை உள்பட பல கழிப்பறைகள், தானியங்கி கதவுகள், மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்தும் அமைப்புகளும் இடம்பெறுகின்றன. அக்டோபர் 2025-ன் நடுப்பகுதியில் இந்த ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இது டெல்லியில் இருந்து அகமதாபாத், போபால் மற்றும் பாட்னா போன்ற இடங்களை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.