3500 கிலோ வேனை அடித்துச் சென்ற வெள்ளம் - வெளியான அதிர்ச்சி காட்சி!
Kerala
Flood
By Sumathi
வேன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டாற்று வெள்ளம்
கேரளா, இடுக்கியில் விடிய விடிய பெய்த கனமழையில், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதில், நெடுங்கண்டம் அருகே உள்ள கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அதிர்ச்சி காட்சி
இதில், வேனில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது, இந்த வேனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.