இமயமலை டூர் போகணுமா? வந்தாச்சு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - அசத்தல் அப்டேட்!

Jammu And Kashmir Railways
By Sumathi Jan 21, 2025 04:30 PM GMT
Report

ஜம்மு - ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - ஸ்ரீநகர்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது. 66 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

vande bharath

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விடுவதற்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (SVDK) ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் ரயில் நிலையம் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

அங்கு கடும் குளிரை தாங்க வேண்டியிருக்கும் என்பதால், சில மாற்றங்கள் உடன் புதிய ரயிலானது வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர் என இயக்க முடியும்.

இனி நீங்களும் பிளைட்டில் போகலாம்; ரூ.1,500க்குள் கட்டணம் - மிஸ் பண்ணாதீங்க!

இனி நீங்களும் பிளைட்டில் போகலாம்; ரூ.1,500க்குள் கட்டணம் - மிஸ் பண்ணாதீங்க!

வந்தே பாரத்

ஆனால் அங்கு மலைப் பாங்கான பகுதி என்பதால் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகம் வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கத்ரா - ரியாசி இடையில் புதிதாக அமைக்கப்பட்ட பிராட்கேஜ் ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

இமயமலை டூர் போகணுமா? வந்தாச்சு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - அசத்தல் அப்டேட்! | Vande Bharat Express Trial Run Start From Jammu

தொடர்ந்து அவர் அனுமதி அளித்த நிலையில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அடுத்த சில நாட்களில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.