இவர்களுக்கு வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் - அரசு வெளியிட்ட அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களின் LIC யில் கூடுதலாக சில பிரீமியம் ரயில்கள் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் LTC(Leave Travel Concession) எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டமும் ஒன்று.
இதன்படி தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்கள் 4 ஆண்டுக்கு இருமுறை சொந்த ஊருக்கோ அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த நகரங்களுக்கோ குடும்பத்துடன் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். இதற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.
வந்தே பாரத்
இதற்கு முன்னதாக கட்டணமின்றி பயணிக்கும் பிரீமியம் ரயில்களின் பட்டியலில் ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் இருந்தன. தற்போது தேஜாஸ், வந்தே பாரத் மற்றும் ஹம்சஃபர் ஆகிய பிரீமியம் ரயில்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை செலவினத் துறையுடன் கலந்தாலோசித்து பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் (DOPT) வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் படிநிலையை பொறுத்து, ஏசி முதல் வகுப்பு, 2ஆம் வகுப்பு போன்ற சலுகைகள் மாறுபடும்.