வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு- கடுப்பான பயணி..ஊழியரை அறைந்த வீடியோ வைரல்!
அசைவ உணவு பரிமாறிய ஊழியரை பயணி ஒருவர் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வந்தே பாரத்
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணி ஒருவருக்கு சைவ பதிலாக அசைவ உணவு பறிமாறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வயதான பயணி ஒருவர் பணியாளரிடம் சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் அந்த பணியாளரை கோவத்தில் அறைந்துள்ளார்.
இந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அசைவ உணவு
அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், பணியாளர் ஒருவர் தவறுதலாக உணவு பரிமாறியதற்காக அவரை அடிப்பீர்களா என்று இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
A person slapped a waiter for mistakenly serving him non-vegetarian food. Others came to support the waiter.#KaleshOfVandeBharatpic.twitter.com/eQTQdLMewU
— Kapil (@kapsology) July 29, 2024
அதேபோல ணியாளருக்கு ஆதரவாக சக பயணிகள் பேசியதையும் நெட்டிசன்கள் பாராட்டியும் வருகின்றனர்.