தமிழக பாஜக தலைவராகும் வானதி - அண்ணாமலையை திடீரென மாற்றக் காரணம்..?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.
அண்ணாமலை
தமிழகத்தில் பெரிய அரசியல் வலிமை இல்லாத கட்சியாக இருந்த பாஜக, கடந்த சில வருடங்களில் பெரும் வளர்ச்சியை அடைந்து விட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், அது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அப்படி கட்சி மாபெரும் வளர்ச்சியடைந்ததற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுவது மாநில தலைவர் அண்ணாமலையை தான்.
அவரின் வருகைக்கு பிறகே கட்சி அசுர வளர்ச்சியை பெற்றதாக பேசப்படுகிறது. கட்சி வளர்ந்துள்ளது தான் என்பதை ஒப்புக்கொண்டாலும், திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு இடத்தை தமிழகத்தில் பாஜக இன்னும் ஈட்டவில்லை என்பதும் அதற்காக அக்கட்சி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளதும் நிதர்சனமான உண்மை.
வானதி ஸ்ரீனிவாசன்
இந்த சூழலில் மாநில தேர்தலை தான் பெரிதளவில் குறிவைத்திற்கும் அண்ணாமலை, தற்போது கோவை மக்களவை தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவர் அவ்வாறு வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றுவிட்டால், கட்சியின் வளர்ச்சிக்காக தலைவர் மாற்றப்படலாம் என்றும் அந்த இடத்தை வானதி ஸ்ரீனிவாசன் தான் நிரப்புவார் என்றும் பாஜகவினர் மத்தியில் பரபரப்பான பேச்சு இருந்து வருகிறது.
இந்த கருத்துகளுக்கெல்லாம், பதில் வரும் ஜூன் 4-ஆம் தேதி விடை தெரிந்து விடும். கட்சியின் வாக்கு சதவீதம் என்ன, வளர்ச்சி என்ன, மக்களிடம் இருக்கும் பாதிப்பு என்ன போன்றவை.