அரசியலின் உண்மையான சூப்பர் ஸ்டார் இவர் தான் - வானதி சீனிவாசன் சூசகம்!
அரசியலின் சூப்பர் ஸ்டார் நான் என சொன்ன சீமானுக்கு வானதி பதிலடி கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, டிகர் ரஜினிகாந்தும் பேசியது எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும்.
அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. புத்தக வெளியீடு என்றாலும், குடும்ப நிகழ்ச்சிகள் என்றாலும் அவரை அழைக்கிறீர்கள். ஒரு முறைதான் நான் அவரை சந்தித்துள்ளேன். அதற்கு, 'ஐய்யோ, ஐய்யோ' என்று அடித்துக் கொள்கிறார்கள்.
ஏனென்றால், அவர் திரையுலக 'சூப்பர் ஸ்டார், நான் அரசியல் சூப்பர் ஸ்டார்'. இரண்டு சூப்பர் ஸ்டார்களை பார்த்ததும் பலர் பயந்துவிட்டார்கள்" என்று பேசினார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இது தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
வானதி சீனிவாசன்
அவர் பேசியதாவது, காவி என்பது பா.ஜ.க.வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது இந்த நாட்டின் பாரம்பரியம். காவி என்பது இந்த நாட்டிலே தியாகத்தை குறிக்கக்கூடிய நிறம். சனாதன தர்மத்தோடு மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கக்கூடிய நிறம்.
அதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் பட்டம் மற்றவர்கள் கொடுக்க வேண்டும். அவரவர் கொடுத்துக் கொள்ளக்கூடாது. அரசியலில் சூப்பர் ஸ்டார் என்றால், மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிதான்.
பிரதமர் மோடி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு புதிய கவுரவத்தை, புதிய மரியாதையை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உலக நாடுகள் எல்லாம் மிகச்சிறந்த தலைவர் என பட்டமளித்துக் கொண்டிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.