விஜய்யின் 200 கோடி பெரிதல்ல.. என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் - சீமான் பேச்சு!

Tamil nadu Chennai Seeman
By Swetha Nov 27, 2024 02:30 PM GMT
Report

தன்னிடம் ரூ.2000 கோடி வரை பேரம் பேசியதாக சீமான் கூறி அரசியல் அரங்கில் புயலை கிளப்பி உள்ளார்.

சீமான் 

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். அதில் தொண்டர்கள் மத்தியில், மேடையில் பேசிய சீமான், இன்றைக்கு தமிழனின் வீரம் பெருமளவு எடுபடவில்லை. பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உலக நாடுகளுக்கு செல்லமுடியாமல் இருக்கிறேன் என்றால் அது எனக்காக அல்ல.

விஜய்யின் 200 கோடி பெரிதல்ல.. என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் - சீமான் பேச்சு! | Political Bargain For Rs 2000 Crores Says Seeman

வியர்க்காமல் விளையாட முடியாது, விமர்சனம் இல்லாமல் வளரமுடியாது. விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்பது அரசியல் விடுதலைதான். தனித்து போட்டியிடுவது என்பது தனிச்சிறப்பு அல்ல.

தனித்துவத்துதோடு போட்டியிடுகிறோம் என்பது தான் சிறப்பு. மக்களோடு களத்தில் நிற்பவர்கள் நாம் மட்டுமே.நாம் மக்களை நம்புகிறோம், எனவே அவர்களுடன் சேர்ந்து நிற்கிறோம்.நாம் கூட்டணி வைப்பதில்லை, பேரம் பேசுவது இல்லை. நினைத்தால் வாங்கலாம்.

தமிழகத்தில் 39 எம்பிகள் உள்ளனர்..ஆனால் என்ன பிரயோஜனம்? அதற்கு வழியில்லை - சீமான்!

தமிழகத்தில் 39 எம்பிகள் உள்ளனர்..ஆனால் என்ன பிரயோஜனம்? அதற்கு வழியில்லை - சீமான்!

ரூ.2000 கோடி

ரூ.200 கோடியை விட்டுவிட்டு வருவது பெரியது என்றால், ரூ.2000 கோடி பேரம் பேசும் போது அதை விட்டுவிட்டு களத்தில் நிற்கிறோம். எவ்வளவு பேர் எத்தனை சீட் தருகிறோம் என்று பேரம் பேசியிருப்பார்கள், உங்களுக்குத் தெரியாதா? திரள் நிதி திரட்டும்போது பிச்சை எடுப்பதாக கூறுகின்றனர்.

விஜய்யின் 200 கோடி பெரிதல்ல.. என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் - சீமான் பேச்சு! | Political Bargain For Rs 2000 Crores Says Seeman

பிச்சைக்காரர்களுக்கு நலத்திட்டம் செய்ய பிச்சை எடுக்கிறார். 1 சதவீதம், 2 சதவீதம் இருப்பவர்களுக்கு இவ்வளவு மார்க்கெட் இருக்கும் போது 8 சதவீதம் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கும்? ஒருவாரம் படம் ஓடிய நடிகருக்கே அவ்வளவு மார்க்கெட் என்றால்

100 நாட்களுக்கு மேலாக தனித்துவமாக நடித்தவர்களுக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கும் தெரியுமா? ரஜினியை சந்தித்ததை பற்றி பேசுகிறார்கள். ரஜினியும் நானும் சந்தித்துக் கொண்டால் இவர்களுக்கு என்ன பிரச்னை.

உங்களை கேட்டுத்தான் சந்திக்க வேண்டுமா? நீங்கள் (தி.மு.க.) மட்டும் பிரதமரை காலையில் தந்தையும், மாலையில் மகனும் சந்தித்தீர்களே? நாட்டை யார் ஆள்வார்கள் என்பதை என் தமிழ்ச் சொந்தங்கள் நகர்த்திவிட்டு, கடந்துவிட்டு செல்ல மாட்டார்கள். எப்படியும் இந்த நாட்டை நாங்கள் ஆள்வோம் என்று தெரிவித்துள்ளார்.