திமுக அரசின் லட்சணம் இது தான் - பாஜக வானதி ஸ்ரீனிவாசன் கடும் விமர்சனம்!!
திமுக அரசின் லட்சணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலேயே தெரிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு என்பது திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் வீட்டில் முன்பு வெட்டி கொல்லப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது.என வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி அறிக்கை
அந்த அறிக்கை வருமாறு,
“தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "திமுக அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள், பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் 10 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை. மத்திய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும். என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
லட்சணம்
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த மூன்று ஆண்டுகளும் இப்படித்தான் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், புதிய ரயில்கள் உள்கட்டமைப்பில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கம், சென்னை புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
மத்திய பாஜக அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாகவே நடத்துகிறது பாஜக ஆளும் மாநிலங்கள் ஆளாத மாநிலங்கள் என்று எந்த விதத்திலும் பாகுபாடு காட்டப்படவில்லை மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரிவிதிக்கும் அதிகாரமும் மத்திய அரசிடம் இல்லாமல் மத்திய அரசுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது எனவே மத்திய அரசு வங்கிக்கிறது என்ற குற்றச்சாட்டை மக்கள் யாரும் நம்ப போவதில்லை. திமுக தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் எதிர்க்கட்சிகள் பிளவு பட்டு நின்றதால் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திமுக அரசின் லட்சணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலேயே தெரிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு என்பது திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் வீட்டில் முன்பு வெட்டி கொல்லப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் லட்சணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலேயே தெரிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு என்பது திமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர் வீட்டில் முன்பு வெட்டி கொல்லப்பட்டதிலிருந்து தெரிந்துவிட்டது. pic.twitter.com/8HJ15gcNds
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 12, 2024