அரசியலுக்கு படித்தவர்கள் தான் தேவையா? விஜய்க்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி
நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது விழாவில், மாணவர்களிடம் பேசியது பேசும் பொருளாக மாறியுள்ளது.
விஜய் விருது விழா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவிய பின்னர், பொதுவெளியில் கலந்து கொண்ட முதல் விழாவாக நடந்துள்ள விஜய் கல்வி விருது விழா. அவர், அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, அரசியலுக்கு படித்தவர்கள் வரவேண்டும் எனக்கூறி, படித்தவர்களின் career'ஆகவும் அரசியல் இருக்கவேண்டும் என கூறினார்.
இதுவே தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. விஜய்யின் கருத்து குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வானதி ஸ்ரீனிவாசன் பதில்
அதற்கு அவர், நல்ல தலைவர்கள் வர வேண்டும் என்பதால் அவர் சொன்னதில் மாற்று கருத்து இல்லை. அதே போல, படித்தவர்களை விட உணர்வு பூர்வமாக மக்களுக்காக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை என்றார்.
தொடர்ந்து பேசிய வானதி, சினிமாவில் எப்படி எப்படியோ நடித்திருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக மாறியபிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதையே நாம் பார்க்க வேண்டும் என விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் கருத்து தெரிவித்தார்.