வக்பு வாரியத்திற்கு எதிராக பேசிய கனிமொழி - பதிலடி கொடுத்த வானதி ஸ்ரீனிவாசன்
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா என்பது இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு மட்டுமல்லாது மனித இனத்திற்கே எதிரானது என கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வக்பு வாரிய திருத்தம்
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கிய நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றிக்கு பயன்படுத்துகிறார்கள். இவற்றை நிர்வாகிக்க 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. வக்பு வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் இடம்பெறலாம் என்பது மட்டுமின்றி இஸ்லாமியர் அல்லாதவர்களும் இந்த வாரியத்தில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது போன்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கனிமொழி விமர்சனம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசும் போது, வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் - சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி மனித இனத்துக்கே எதிரானது என குறிப்பிட்டு, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர் என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசியவர், எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி, அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றார்.
வானதி பதிலடி
இந்த நிலையில் தான் கனிமொழி தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப்பதிவு வருமாறு,
இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கனிமொழி!
அப்போது இந்து அறநிலையத்துறை வருமானத்தை இந்துக்களுக்கு மட்டும் செலவழிக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளுமா? மேலும் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட தெரிவிக்காத முடியாத முதல்வர் ஏன் இந்து அறநிலைய துறையை எவ்வாறு நிர்வகிக்கலாம்! இல்லை என்றால் வாக்பு வாரிய சொத்துக்களை அரசே நிர்வகிக்கட்டும் அதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா? @KanimozhiDMK அவர்களே.
இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கனிமொழி!
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 8, 2024
அப்போது இந்து அறநிலையத்துறை வருமானத்தை இந்துக்களுக்கு மட்டும் செலவழிக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளுமா? மேலும் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட தெரிவிக்காத முடியாத முதல்வர் ஏன்…
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.