வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் - இண்டி கூட்டணி வேடிக்கை பார்க்கிறது!! வானதி ஸ்ரீனிவாசன்
பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய 'இண்டி' கூட்டணி கட்சிகள், பங்களாதேஷ் இந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றன என வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி
இது தொடர்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக, 'மனிதம் மரத்துப் போய் விட்டதா?' என்று கேள்வி எழுப்பி நீண்டதொரு அறிக்கை வெளியிட்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, இப்போது மங்களதேஷ் இந்துக்களுக்கு குரல் கொடுக்க மனமில்லை.
• காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட 'இண்டி‘ கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது தான் 'இண்டி' கூட்டணி கட்சிகளின் பாரம்பரியம். எல்லாம் வாக்கு வங்கி படுத்தும்பாடு.
ராமரை பற்றி தெரியவில்லை என்றால் சேகர் பாபுவிடம் கேளுங்கள்..அமைச்சர் சிவசங்கருக்கு வானதி ஸ்ரீனிவாசன் அறிவுரை!!
இது தான் மதச்சார்பின்மையா?
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் குறிப்பாக திமு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நமது அண்டை நாடான, 1947-க்கு முன்பு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பங்களாதேஷில், மண்ணின் மைந்தர்களான இந்துக்கள் தாக்கப்படுவது குறித்தும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்படுவது குறித்தும், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. இந்துக்கள் தாக்கப்பட்டால் வேடிக்கை பார்ப்பது தான் ‘இண்டி' கூட்டணி கட்சிகளின் மதச்சார்பின்மை
பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய 'இண்டி' கூட்டணி கட்சிகள், பங்களாதேஷ் இந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றன. pic.twitter.com/0iAcobacry
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 7, 2024
இவ்வாறு அவர் குறிப்பிட்டுருக்கிறார்.