அரசியல் சாயம் வெளுத்திவிட்டது - கமலை கடுமையாக விமர்சித்த வானதி ஸ்ரீனிவாசன்
வரும் மக்களவை தேர்தலில் திமுகவின் கூட்டணியில் இடம்பிடிப்பதை உறுதிசெய்துள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி.
1 ராஜ்யசபா
கூட்டணியில் இம்முறை போட்டி இல்லை என்றாலும், வரும் 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராஜ்ய சபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு சீட் ஒதுக்கியுள்ளது திமுக.
இதனை கமல்ஹாசன் உறுதிசெய்திட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அவர் மீது அவரது கட்சி மீதும் கடுமையான விமர்சங்களை வைக்க துவங்கிவிட்டனர்.
இது குறித்து பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், கடந்த முறைதேர்தலில் போட்டியிட்டபோது கூட மக்களால் அணுக முடியாத நபராகத்தான் கமல்ஹாசன் இருந்தார் என குறிப்பிட்டு, அதற்கான சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தார்கள் என்றார்.
அரசியல் சாயம்
அவர் தேர்தலில் போட்டியிடாதது பாஜகவிற்கு ஏமாற்றம்தான் என்ற வானதி ஸ்ரீனிவாசன், எப்படியாவது ஒரு எம்.பி. ஆகிவிடமாட்டோமா என்ற எண்ணத்தில் எந்த கட்சியை அவர் விமர்சித்தாரோ அந்த கட்சியுடனேயே கூட்டணி அமைத்ததுள்ளார் என சாடினார்.
வேட்பாளராக மக்களிடம் பேசிய முடியாத அவர், பிரச்சாரத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறார்? என்று வினவிய வானதி ஸ்ரீனிவாசன், அரசியல் ஆசைக்காக மாநிலங்களவை எம்.பி.பதவிக்கான இடத்தை எடுத்துக் கொள்கிறார் என்றும் அவரின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது என்று தெரிவித்தார்.