பாஜக-வுக்கு எத்தனை தொகுதிகள்? யார் யார் போட்டி? வானதி சீனிவாசன்
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் முடிவு எடுக்கும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகிறது.
கூட்டணிகளையும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பதையும் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.

இக்கூட்டணியில் பாஜக, அதிமுக, அமமுக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இணைந்துள்ளனர்.
யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் பாஜக போட்டியிடும்.
பாஜக தேர்தலுக்காக மட்டும் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி அல்ல, ஆண்டு முழுக்கவே மக்களுக்கு சேவை செய்கிறோம், தேர்தல் நேரத்தில் கூடுதலாக வேலை செய்கிறோம். என்டிஏ கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையவிருக்கின்றன என தெரிவித்தார்.
மேலும் தலைமை முடிவு செய்யும் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என ஒரு சகோதரியாக ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், இந்த தேர்தலில் கோவை வடக்கு பகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
