தவெக மக்கள் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்? காவல்துறை விளக்கம்
சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்த தமிழக வெற்றி கழத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தவெக முடிவு செய்தது, இதற்காக மகுடஞ்சாவடி சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடல் பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் தலைமையிலான குழுவினர் குறித்த இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மனு வழங்கப்படவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டது.
மேலும் கூறுகையில், பிரசார கூட்டங்கள் நடத்தும் போது நீதிமன்றம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதன்படி 10 நாட்களுக்கு முன்பே மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்,. ஒருவேளை கூட்டம் அதிகமானால் அதை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறார்கள் என்பது குறித்த திட்டம் பற்றி தெரிவித்திருக்க வேண்டும்.
அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப முறையாக மனு தாக்கல் செய்தால், அவர்கள் கோரிய தேதியில் அனுமதி வழங்கப்படும்.
ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படாததால், தற்போது அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
