பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்?? கவனத்தை வேறு பக்கம் திருப்பிய வானதி

Tamil nadu BJP Kerala Vanathi Srinivasan Pinarayi Vijayan
By Karthick Apr 22, 2024 09:34 AM GMT
Report

கேரளா மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பு குறித்து வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி

அரசியலும் - சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. திரை நட்சத்திரங்கள் பலரும் அரசியலில் ஆதிக்க சக்தியாக இருந்துள்ளனர். இன்னும் இருந்து வருகிறார்கள். அப்படி சினிமாவின் அரசியலை புகுத்துவது புதிதல்ல.

இந்த படத்தை மட்டும் டிவி'ல போடாதீங்க...கொந்தளிக்கும் கேரள முதல்வர் பின்ராயி விஜயன்

இந்த படத்தை மட்டும் டிவி'ல போடாதீங்க...கொந்தளிக்கும் கேரள முதல்வர் பின்ராயி விஜயன்

ஆனால், ஒரே சித்தாந்தத்தை கையிலெடுத்து படம் எடுத்து மக்களுக்கு காட்டுவது விமர்சனத்திற்குள்ளான விஷயமே. கேரளாவில் நடைபெற்ற உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டு "தி கேரளா ஸ்டோரி" என்ற படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

vanathi-bjp-on-kerala-police-department-report

32,000 இளம்பெண்களை காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்ததாக கூறப்பட்டு இந்த படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாக நாட்டில் பல இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

vanathi-bjp-on-kerala-police-department-report

கேரளா முதல்வர் பினராயி விஜயன், இப்படத்திற்கு பெரிய கண்டனத்தை தெரிவித்திருந்தார். அண்மையில் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை கடுமையாக எதிர்த்தார் பினராயி விஜயன்.

vanathi-bjp-on-kerala-police-department-report

இந்த சூழலில் தான், வரும் 26-ஆம் தேதி அம்மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமாக இருக்கும் 20 மக்களவை தொகுதிக்கான போட்டியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் LDF கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே நீடிக்கிறது.

vanathi-bjp-on-kerala-police-department-report

தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பெண்கள் பாதுகாப்பின்மை குறித்தான குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து வருகின்றது பாஜக. இந்நிலையில், தான் தமிழக சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

vanathi-bjp-on-kerala-police-department-report

அதில், கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் 5338 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர், இது The Kerala Story படத்தின் கவலையளிக்கும் கதையை எதிரொலிக்கிறது. ஆயினும்கூட, இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, திரு.பினராயி விஜயன், இதனை வெறுமனே பாஜகவின் பிரச்சாரம் என தள்ளி வைக்கிறார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் காட்டிலும் நம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. காணாமல் போகும் ஒவ்வொரு பெண்ணும் வேதனையில் இருக்கும் ஒரு குடும்பத்தையும், துயரத்தில் இருக்கும் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நம்முடைய பெண்களை பாதுகாப்போம், அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்.