இந்த படத்தை மட்டும் டிவி'ல போடாதீங்க...கொந்தளிக்கும் கேரள முதல்வர் பின்ராயி விஜயன்

Kerala Pinarayi Vijayan
By Karthick Apr 05, 2024 08:42 AM GMT
Report

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கதையாக அடிப்படையாக கொண்டது உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது கேரளா ஸ்டோரி படம்.

தி கேரளா ஸ்டோரி

அரசியலும் - சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. திரை நட்சத்திரங்கள் பலரும் அரசியலில் ஆதிக்க சக்தியாக இருந்துள்ளனர். இன்னும் இருந்து வருகிறார்கள். அப்படி சினிமாவின் அரசியலை புகுத்துவது புதிதல்ல.

pinrayi-vijayan-dont-want-this-film-to-telecast

ஆனால், ஒரே சித்தாந்தத்தை கையிலெடுத்து படம் எடுத்து மக்களுக்கு காட்டுவது விமர்சனத்திற்குள்ளான விஷயமே. கேரளாவில் நடைபெற்ற உண்மை கதை என்று குறிப்பிடப்பட்டு "தி கேரளா ஸ்டோரி" என்ற படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

pinrayi-vijayan-dont-want-this-film-to-telecast

32,000 இளம்பெண்களை காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்ததாக கூறப்பட்டு இந்த படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாக நாட்டில் பல இடங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

பினராயி அறிக்கை

ஆனாலும், கேரளாவில் படத்தை திரையிட ஆளும் அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து தடை விதித்தது. தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில், படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரபர திட்டமிடப்பட்டுள்ளது.

நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு திமுக துணை நிற்கும் - பினராயி விஜயனுக்கு உறுதியளித்த முதலமைச்சர் ..!

நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு திமுக துணை நிற்கும் - பினராயி விஜயனுக்கு உறுதியளித்த முதலமைச்சர் ..!

ஆனால், இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பெரும் எதிர்ப்புகளை தேய்வித்துள்ளார். படத்தை இன்று (ஏப்.5) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

pinrayi-vijayan-dont-want-this-film-to-telecast

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, டிடி நேஷனல் மூலம் சித்தாந்த முனைப்பைத் தூண்டும் 'கேரள கதை' திரைப்படத்தை ஒளிபரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய செய்தி ஒளிபரப்பாளர் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக மாறக்கூடாது.

 

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடுவதில் இருந்து விலக வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா உறுதியாக இருக்கும்.