நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு திமுக துணை நிற்கும் - பினராயி விஜயனுக்கு உறுதியளித்த முதலமைச்சர் ..!

By Karthick Feb 06, 2024 06:48 AM GMT
Report

கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக ஸ்டாலின் பதிவு

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், மாண்புமிகு தோழர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள் என்னிடம் அளித்திருந்தார்.

cm stalin pinarayi vijayan

அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன்.

cm stalin pinarayi vijayan

மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேகத்துடன் - ஒருங்கிணைப்புடன் வெல்ல வேண்டும் - அதிகரிகளுடனான ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின்

வேகத்துடன் - ஒருங்கிணைப்புடன் வெல்ல வேண்டும் - அதிகரிகளுடனான ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின்

உரிமைக்குரல் ஓயாது!

தெற்கில் நாம், தோழர் பினராயி விஜயன், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி மம்தா என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்! கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி,

மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது! உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது!