துணை முதல்வர் உதயநிதிக்கு இத்தனை கோடி கடன் இருக்கா.? வெளியான அதிர்ச்சி தகவல்!
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றார்.
திமுக
தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை ஆளுநரிடம் பரிந்துரை செய்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு நேற்று (செப். 28) ஒப்புதல் அளித்தார்.
இந்த ஒப்புதலை தொடர்ந்து இன்று அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் இதுவரை துணை முதல்வர் இருந்தது இல்லை. பதவியேற்பும் நடைபெற்றது இல்லை .இந்த சூழலில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.அதன் பிறகு விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.தற்போது தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில் உதயநிதியின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது சொத்து விவரங்களை உதயநிதி தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஒட்டு மொத்த சொத்து மதிப்பாக 22.53 கோடி என குறிப்பிட்டுளார். 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 600 கிராம் தங்கம் வைத்திருப்பதாகவும், வங்கியில் வைப்பு தொகையாக 1.22 கோடியும், இன்சூரன்ஸ் பாலிசிகள் 16 லட்சத்தில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் பாண்டுகள் மற்றும் பங்குகள் என 7.22 கோடிக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 11 கோடிக்கு கடன் இருப்பதாகவும் தனது சொத்து மதிப்பு விவரங்களை உதயநிதி தெரிவித்துள்ளார்.