துணை முதல்வர் ஆகும் உதயநிதி - கூடுதல் அதிகாரம் என்ன?
தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆக இருந்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான பரிந்துரை கடிதத்தை நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பி இருந்தார். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
துணை முதல்வர்
இன்று ஆளுநர் மாளிகையில் மாலை 3;30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். மேலும் தான் கவனித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் சேர்த்து திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி, "நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
— Udhay (@Udhaystalin) September 28, 2024
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல,… pic.twitter.com/x7InLzXoNc
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் அதிகாரம்
பொதுவாக அரசியலமைப்பில் துணை முதல்வர் என்ற பதவி கிடையாது. இது அரசு ரீதியான நியமன பொறுப்பு. துணை முதல்வர் என்பது முதல்வருக்கு அடுத்த மாநில அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய பதவி ஆகும்.
முதல்வர் இல்லாத நேரங்களில் முதல்வர் சார்பில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கும் துணை முதல்வருக்கு அதிகாரம் உண்டு. முதல்வர் உள்ள போதும் கூட முதல்வரின் உத்தரவின் பெயரில் கூட்டங்களை நடத்தவும், ஆலோசனைகளை மேற்கொள்ளவும், முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்கவும் முடியும்.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தற்போது14 மாநிலங்களில் மட்டுமே துணை முதல்வர்கள் உள்ளனர். இதில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் ஒடிசாஆகிய மாநிலங்களில் மட்டும் தலா இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர்.