ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா; முத்த தினம் இன்று - சுவாரஸ்ய பகிர்வு!

Valentine's day
By Sumathi Feb 13, 2023 08:47 AM GMT
Report

காதலர் தினத்துக்கு முந்தைய தினமாக முத்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

முத்த தினம்

முத்தம் என்பது காதலர்களுக்கு இடையே காதலை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாக மட்டும் அல்லாமல் அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.

ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா; முத்த தினம் இன்று - சுவாரஸ்ய பகிர்வு! | Valentines Kiss Day 2023

மன அழுத்தத்தை குறைப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முத்தத்திற்கு முக்கியமான பங்கு உள்ளதாம். இது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைப்பதிலும் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

என்னென்ன செய்யும்?

பிரெஞ்சு முத்தம் என அழைக்கப்படும் உதட்டு முத்தத்தால் பல கலோரிகள் உடலில் இருந்து எரிக்கப்படுகிறதாம். உடல் எடையை குறைக்க நாள் கணக்கில் ஓடுவது போல சில முத்தங்களையும் கொடுக்கலாம்.

ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா; முத்த தினம் இன்று - சுவாரஸ்ய பகிர்வு! | Valentines Kiss Day 2023

மேலும், சாதாரணமாக சுவாசிக்கும்போது 20 முறை காற்றை சுவாசிக்கிறோம். ஆனால் ஒரு தீவிர உதட்டு முத்ததிற்கு பின் 60 முறை வரை மூச்சை இழுத்து விடுகிறோமாம். இதனால் நுரையீரல் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுவாச பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் வழி செய்கிறது.

அன்பின் வகைகள்

கைகளில் முத்தம் கொடுத்தால் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.

நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.

மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள்.

ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா; முத்த தினம் இன்று - சுவாரஸ்ய பகிர்வு! | Valentines Kiss Day 2023

கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும்,

கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும்,

கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம். இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா; முத்த தினம் இன்று - சுவாரஸ்ய பகிர்வு! | Valentines Kiss Day 2023

ஆயிரம் வார்த்தைகளுக்கு இணையானது ஒரு முத்தம் - Happy Kiss day 2023