‘‘ இந்த வாரம் காதல் வாரம் ’’ - ‘’ அந்த 7 நாட்கள்’’ காதலர் தினம் பற்றி தெரிஞ்சுக்க வேண்டிய சில தகவல்கள்.!
நாட்டு நடப்பு முதல் மக்கள் உணர்வுகள் வரை அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒன்றாக மீம்ஸ்கள் வலம் வருகின்றன. இவை பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு, இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில், இன்று சமூக வலைதளங்களில் ரோஸ் டே ட்ரெண்டிங்கில் உள்ளது . ஏனென்றால் வரும் பிப் -14 காதலர் தினம் என்பதால் இந்த வாரம் காதலர்களின் வாரம் என்றே கூறலாம் . உண்மை காதல் கண்களால் வருவதில்லை மனதால் வருகின்றது காதல் குறித்து ஷேக்ஸ்பியர் சொன்ன கருத்து இது.
காதலர்களுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் வேலண்டைன்ஸ் டே மட்டுமே காதலர் தினமல்ல. அதற்கு ஒருவாரம் முன்பிருந்தே அதற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது.
ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றையும் கொண்டாடுகிறார்கள். இந்த தினங்களுக்கு எனத் தனிச்சிறப்பு உண்டு.
அது என்ன என அப்பாவியாக கேட்கும் 90 ஸ் கிட்ஸ்களுக்கு உங்களின் சந்தேகத்தை போக்க இதோ அந்த அறிய ஏழு நாட்களும் , விளக்கங்களும்.
பிப்ரவரி 7 - ரோஸ் டே (Rose Day)
‘’ உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ’’
இந்த பாடல் வரிகள் போலவே காதல் என்று சொன்னாலே சங்க காலம் தொடங்கி இந்த காலம் வரையிலும் பூக்கள் தான் தூதுவர்களே ஆக ரோஸ் டே அன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
ரோஜாக்களின் நிறமும் அவற்றின் பின்னால் உள்ள உணர்வுகளை வரையறுக்கிறது. யாராவது தங்கள் அன்புக்குரியவருக்கு சிவப்பு ரோஜாவைப் பரிசாகக் கொடுத்தால், அது காதலைக் குறிக்கிறது. மஞ்சள் ரோஜா நட்பைக் குறிக்கிறது.
பிப்ரவரி 8 - ப்ரோபோஸ் டே (Propose Day)
’உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே ‘’ காதலை வெளிபடுத்தும் நாளாக ப்ரோபோஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் பார்டனரிடம் அன்று வெளிப்படுத்துகிறார்கள்.
இன்றைய தேதியில் நிறைய பேர் தங்கள் காதலர் முன்பு மண்டியிட்டு கையில் மோதிரம் ஏந்தியிருப்பதைக் காணலாம். ( அப்புறம் உண்மை காதலுக்கு வைரமோதிரம் தான் தேவை என நினைக்க கூடாது கவுண்டமணி சார் சொல்ற மாதிரி ஈயமோ பித்தளையோ வசதிக்கு தகுந்த மாதிரி )
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம் (Chocolate Day)
‘ஸ்வீட் எடு கொண்டாடு’’ மூன்றாவது நாள் சாக்லேட் தினம். இந்த நாளில், மக்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கசப்புகளையும் மறந்துவிட்டு, இனிப்பு மிக்க சுவையான சாக்லேட்டுகளை பரிமாறிக்கொள்வார்கள்.
இது காதலர்களுக்கு மட்டும் அல்ல நண்பர்களுக்கு வாங்கி கொடுக்கலாம்.
பிப்ரவரி 10 - டெட்டி டே (Teddy Day)
டெடி பேர கட்டிஉறங்கிடும் குட்டி மலர் இவ பாத்தா மனசொரு கட்டிங் அடிக்குது பா
காதலுக்கு பரிசில் ரோஸிற்கு அடுத்த இடத்தில் டேடி உள்ளது ,நான்காவது நாளில், காதலில் உள்ளவர்கள் தங்கள் பார்ட்னர்களுக்கு ஒரு டெட்டி பியரை பரிசாக வழங்குகிறார்கள்.
அந்த நபரின் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தவும் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யவும் உங்கள் காதலிக்கு நீங்கள் ஒரு சாஃப்ட் டாய் பொம்மையை வழங்குவதே யோசனை.
ஆகவே ஒரு டெடியினை வாங்கி கொடுத்து எந்தன் நண்பியே நண்பியே எனை திறக்கும் அன்பியே ஒரு பாடலை பாடுங்கள் ( குறிப்பு பாடலை ஸ்ருதியோடு)
பிப்ரவரி 11 - ப்ராமிஸ் டே (Promise Day)
‘‘கண்ணே கனியேஉன்னை கைவிடமாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே ‘’
பிப்ரவரி 11 அன்று, தம்பதிகள் ப்ராமிஸ் டேவைக் கொண்டாடுகிறார்கள். (மிக முக்கியம் வாக்கு கொடுக்கும் போது வார்த்தை முக்கியம் , வாக்கு மீறி பஞ்சாயத்தானால் நிர்வாகம் பொறுப்பல்ல )
பிப்ரவரி 12 - ஹக் டே (Hug Day)
அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
ஆறாவது நாள் ஹக்டே. ஒருவரைக் கட்டிப்பிடிப்பதில் அவரின் உடலில் உள்ள செரட்டோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்க தொடங்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து
ஆகவே உங்கள் பார்ட்னருக்கு மகிழ்ச்சியைத் தராமல் வேறு யாருக்கு கொடுக்கப்போறிங்க பிறகு ஹக் டே அன்று உங்கள் பாடனரின் அனுமதி முக்கியம் பிறகு பஞ்சாயத்தானால் நிர்வாகம் பொறுப்பல்ல
பிப்ரவரி 13 - கிஸ் டே (Kiss Day)
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும், மூட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்,
காதலர் தினத்திற்கு முன்னதாக பிப்ரவரி 13 அன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்கள் பார்ட்னர்களை முத்தமிடுகிறார்கள். காதலை வெளிப்படுத்த முத்தத்தை விட வேறு எது சிறந்த வழி என கவிஞர்கள் சொல்லி உள்ளார்கள்
இதற்கும் உங்கள் பாட்னர் அனுமதி முக்கியம்
பிப்ரவரி 14 காதலர் தினம் (Valentine's Day)
காதல் ஒரு butterfly போல வரும் வந்தால்
அது கண்ணாமூச்சி ஆடி விடும்
காதலர்களின் கொண்டாட்டமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதல் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் தங்களது வாழ்வின் மறக்கமுடியாத தினத்தை இவர்கள் அன்று உருவாக்குகிறார்கள்.
உண்மைய கூற வேண்டும் என்றால் காதலுக்கு இந்த 7 நாட்கள் வெறும் கொண்டாடங்களே ,,
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று.. காதலர் தினம் படத்தில் வரும் பாடல் வரிகள் போல
உண்மையான அன்பால் இணைந்த இதயங்களுக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான் .