லவ்வர்ஸ் மட்டும் ஹேப்பியா இருக்கனுமா - சிங்கிள்ஸ்-க்கு பிரியாணி இலவசம்
சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக உணவகம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
காதலர் தினம்
அசாமின் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் ஒன்று உள்ளது. காதலர் தினமான இன்று சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து உணவகம் செய்த விளம்பரத்தில்,

'காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம்' எனத் தெரிவித்து ஆறுதலையும் கூறியுள்ளது. மேலும், இது குறித்து பேசிய உணவகத்தின் உரிமையாளர், 'ஆமாம், இங்கு வரும் சிங்கிள்களுக்கு பிரியாணி இலவசம்,
பிரியாணி இலவசம்
இந்த காதலர் தினத்தில் காதலர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கணுமா? சிங்கிள்களுக்கும் ஏதாவது ஆப்ஷன் இருக்கணும்', அதற்காகவே பிரியாணி இலவசமாக கொடுப்பதாக தெரிவித்தார். தற்போது அந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.