பிரியாணி வருவதில் தாமதம் : உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபர் .. வைரலாகும் வீடியோ
பிரியாணி கொண்டு வர தாமதமானதால் ,உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியினையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணி கடையில் தகராறு
நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் ஜாக் உணவகம் உள்ளது, இந்த உணவகத்திற்கு நேற்று இரவு வந்த 3 நபர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.
Location: Greater Noida
— Shiv Aroor (@ShivAroor) November 10, 2022
Reason: Biryani order late
All 3 thugs arrested by @noidapolice pic.twitter.com/7qEdXNeChu
அப்போது பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதானால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார்.
வைரலாகும் வீடியோ
இந்த தாக்குதல் சம்பவம் அந்த உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.ஆகவே அந்த வீடியோ பதிவில் இருந்த 3 பேர் கைது செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.