சதிகாரர்கள் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் : வைத்திலிங்கம்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 23, 2022 07:49 AM GMT
Report

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிரும் புதிருமாக மேடையில் அமர்ந்திருந்தனர்.

ஆவேசமான சண்முகம்

அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

சதிகாரர்கள் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் :  வைத்திலிங்கம் | Vaithiyalingam Admk Tamilnadu

பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவி சண்முகம் குறுக்கிட்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முழக்கமிட்டு ஆவேசத்துடன் அறிவித்தார்.

அழிவுப்பாதையில் அதிமுக

இந்த நிலையில் பொதுக்குழ்வில் பங்கேற்க வந்த ஒபிஎஸ் பொதுக்குழுவை விட்டு வெளியேறினார், அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்புஓபிஎஸ் பேச முயன்றபோது பொதுக்குழு மேடையில் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்.

சதிகாரர்கள் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் :  வைத்திலிங்கம் | Vaithiyalingam Admk Tamilnadu

ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால் தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும்;அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்த தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது; சதிகாரர்கள் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார் .

கலவரமான அதிமுக பொதுக்குழு கூட்டம் ? தாக்கப்பட்டாரா ஓ.பி.எ.ஸ்?