பைத்தியம் டாக்டர் கிட்ட போ.. சுசித்ரா பேட்டிக்கு வைரமுத்து கொடுத்த பதிலடி!

Vairamuthu Tamil Singers Sujitha
By Vidhya Senthil Sep 21, 2024 08:59 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றசாட்டுகளை பாடகி சுஜித்ரா முன்வைத்திருந்த நிலையில் பைத்தியம் முதலில் நீ டாக்டரை பாரு என்று சுஜித்ராவை சாடும் வகையில் வைரமுத்து பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி சுஜித்ரா 

சமீபத்தில் கேரள மாநிலத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நடிகைகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் பலரது மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

vairamuthu

இந்த சூழலில் தமிழ் திரையுலலும் முன்னணி நடிகைகள் பாலியல் புகார்களை கூறிவரும் நிலையில்,''பாடகி சுஜித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றசாட்டு முன்வைத்து இருந்தார்.

கே.பாலச்சந்தர் குறித்து அவதூறாக பேசிய சுசித்ரா - இயக்குநர்கள் சங்கம் கண்டனம்!

கே.பாலச்சந்தர் குறித்து அவதூறாக பேசிய சுசித்ரா - இயக்குநர்கள் சங்கம் கண்டனம்!

அதில் வைரமுத்து தன்னிடம் அபசமாக பேசியுள்ளதாகவும் ,தன்னை பண்ணை வீட்டிற்கு அழைத்ததாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாடகி சுஜித்ராவை சாடும் வகையில் வைரமுத்து பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 வைரமுத்து

இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்;

தொடர்பற்ற மொழிகள் பேசுவர் பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர் தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்;

இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.