கே.பாலச்சந்தர் குறித்து அவதூறாக பேசிய சுசித்ரா - இயக்குநர்கள் சங்கம் கண்டனம்!

Tamil Cinema Suchitra K. Balachander
By Swetha Sep 20, 2024 10:44 AM GMT
Report

சுசித்ராவுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுசித்ரா 

மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் குறித்து பாடகி சுசித்ரா அவதூறு கருத்து பரப்பியதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கே.பாலச்சந்தர் குறித்து அவதூறாக பேசிய சுசித்ரா - இயக்குநர்கள் சங்கம் கண்டனம்! | Director Association Condemns Suchi Leaks Suchitra

இது தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம்

சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது. தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும்,

திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள். தேசிய விருது, கலைமாமணி,

பிரியங்கா வாழ்க்கையையே நாசம் செய்து விட்டார் - மணிமேகலைக்கு ஆதரவாக இறங்கிய சுசித்ரா

பிரியங்கா வாழ்க்கையையே நாசம் செய்து விட்டார் - மணிமேகலைக்கு ஆதரவாக இறங்கிய சுசித்ரா

இயக்குநர்கள் சங்கம்

பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள்.அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாட. திருமதி.சுசித்ரா அவர்கள் திரு.கே.பாலசந்தர் அவர்களை பற்றி அவதூறாகவும்,

கே.பாலச்சந்தர் குறித்து அவதூறாக பேசிய சுசித்ரா - இயக்குநர்கள் சங்கம் கண்டனம்! | Director Association Condemns Suchi Leaks Suchitra

அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும்.

இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களை பேட்டி என்ற பெயரில்

அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி திருமதி.சுசித்ரா அவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.