முழு மதிப்பெண் எடுத்து சாதித்த மாணவிக்கு தங்க பேனா தருகிறேன் - வைரமுத்து ட்வீட்!

Tamil nadu Vairamuthu Dindigul
By Vinothini May 09, 2023 07:14 AM GMT
Report

 பிளஸ் 2 பொது தேர்வில் முழு மதிப்பெண் எடுத்து சாதனை பெற்ற மாணவிக்கு என் தங்க பேனாவை தரப்போகிறேன் என்று வைரமுத்து தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாதித்த மாணவி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் திண்டுக்கல் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை பெற்றுள்ளார்.

vairamuthu-praises-school-girl-nandini

இவர் ஒரு தச்சு தொழிலாளியின் மகள், இவருக்கு சிஏ படிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார்.

ஏழ்மையிலும் பெற்றோருக்கும், அரசு பள்ளிக்கும் பெருமை சேர்த்த இந்த மாணவிக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்து ட்வீட்

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி இவர் அந்த மாணவியை திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று அவருக்கு தனது தங்க பேனாவை வழங்க போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இந்த தங்க பேணா கருமேகங்கள் கலைகின்றன எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் வீரசக்தி, வைரமுத்துவை பாராட்டி பேசினார்.

vairamuthu-praises-school-girl-nandini

அப்போது இவருக்கு தங்க பேனாவை பரிசாக கொடுத்தார். இந்த பேனாவை தான் அந்த மாணவிக்கு கொடுக்கபோவதாக அவர் பகிர்ந்துள்ளார்.