இதை கவனிச்சீங்களா! கலைஞரின் நினைவு நாள்- திமுகவினரை அலறவிட்ட வைரமுத்து!

M K Stalin M Karunanidhi DMK
By Vidhya Senthil Aug 07, 2024 09:00 AM GMT
Report

 முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 கலைஞர்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதை கவனிச்சீங்களா! கலைஞரின் நினைவு நாள்- திமுகவினரை அலறவிட்ட வைரமுத்து! | Vairamuthu Post On Kalaignar 6Th Memorial Day

இதைத்தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.பிறகு சென்னை அண்ணா சிலையில் இருந்து மெரினா வரை முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது .

மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க.. கலைஞரின் நினைவு நாளில் வைரலாகும் உதயநிதி ட்விட்!

மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க.. கலைஞரின் நினைவு நாளில் வைரலாகும் உதயநிதி ட்விட்!

கோபாலபுரம்

தொடர்ந்து திமுக சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்குபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்திய அவர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் உன் பிறந்தநாளுக்கும் நினைவுநாளுக்கும் வேறுபாடு ஒன்றுண்டு நீ பிறந்த நாளில் ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே பிள்ளையாகினாய் நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய் குடகுமலை மழையால் மேட்டூர் நீர்மட்டம் உயர்வது மாதிரி ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது.

  வணங்குகிறோம் உங்களை; வாழ்த்துங்கள் எங்களை நினைவிடம் கோபாலபுரம் சி.ஐ.டி காலனி அஞ்சலியின்போது... என தெரிவித்துள்ளார்.