ஆகஸ்ட் 7-ம் தேதி திமுக அமைதி பேரணி அறிவிப்பு..!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவருடைய 4வது நினைவு தினம் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
திமுக அமைதி பேரணி
இது குறித்து திமுக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கலைஞரின் 4வது நினைவுநாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன்,
பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உட்பட திமுக கழக முன்னணியினர் அமைதிப் பேரணி நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 7ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலையில் இருந்து தொடங்கி காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.