மனிதா - நீ எழுப்பும் இசை!! எல்லாம் கூட்டியக்கம் - இளையராஜாவை சீண்டுகிறாரா வைரமுத்து??
இசைஞானி இளையராஜா தொடர்ந்த காப்புரிமை வழக்கு பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
காப்புரிமை
இசைஞானி இளையராஜா தான் இசைமையத்த பாடல்களை ஒப்பந்தம் முடிந்தும் அதன் பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று தான் இளையராஜாவின் பாடல்களை இசை நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, அதற்கு உரிமை உள்ளது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை கோரி மீண்டும் இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எக்கோ நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
அப்போது, தயாரிப்பாளரிடம் இருந்து காப்புரிமை பெற்று தான் பாடல்களை பயன்படுத்துவதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்ட நிலையில், இளையராஜா தன்னை அனைவரை விடமும் மேலானவர் என நினைக்கிறார் போலும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்க்கு இளையராஜா தரப்பில், ஆம் நான் அனைவர்க்கும் மேலானவன் தான் பதில் கொடுக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற விசாரணையில், இளையராஜாவை போலவே பாடல் எழுதியர்களும் உரிமை கோரினால் என்னாவது என கேள்வி முன்வைக்கப்ட்டது.
இக்கேள்வியை ஆமோதிப்பதை போலவே, வைரமுத்துவின் பதிவின் அமைந்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
நெற்றித்தீ - 38
மனிதா!
நீ எழுப்பும் இசை
உடலால் விளைவதா?
உயிரால் விளைவதா?
நெற்றித்தீ - 38
— வைரமுத்து (@Vairamuthu) April 25, 2024
மனிதா!
நீ எழுப்பும் இசை
உடலால் விளைவதா?
உயிரால் விளைவதா?
உடலால் எனில்
உயிரை விட்டுவிடப்போமோ?
உயிரால் எனில்
உடலைச் சுட்டுவிடப்போமோ?
உயிர் உந்தி எழாமல்
உடல் சிந்திவிடாமல்
இசையேது இசை?
மொழியேது மொழி?
சுயமென்று ஏதுமில்லை;
எல்லாம் கூட்டியக்கம்
பிறக்கும் பிள்ளை…
உடலால் எனில்
உயிரை விட்டுவிடப்போமோ?
உயிரால் எனில்
உடலைச் சுட்டுவிடப்போமோ?
உயிர் உந்தி எழாமல்
உடல் சிந்திவிடாமல்
இசையேது இசை?
மொழியேது மொழி?
சுயமென்று ஏதுமில்லை;
எல்லாம் கூட்டியக்கம்
பிறக்கும் பிள்ளை
ஆணோ பெண்ணோ
பெறுவது மட்டும்
ஆணும் பெண்ணும் என குறிப்பிட்டுள்ளார்.