நீங்கள் எல்லோருக்கும் மேலானவரா? இளையராஜாவிற்கு நீதிமன்ற சரமாரி கேள்வி

Karthick
in பிரபலங்கள்Report this article
பாடல்கள் காப்புரிமை வழக்கில் "நான் எல்லோருக்கும் மேலானவன்தான்" என்று இளையராஜா தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இளையராஜா
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை, எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த பயன்பாட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் நீதிமன்றம் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதிக்கப்ட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலானவர்
அப்போது, தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்களின் காப்புரிமை பெற்றுள்ளோம் என குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இம்மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அமர்வு விசாரித்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என்று குறிப்பிட்டார்.
இளையராஜா தரப்பில் இருந்து இதற்கு, "ஆம் நான் எல்லோருக்கும் மேலானவன் தான், வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்" என்று பதிலளிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி மகாதேவன் இசை மும்மூர்த்திகள் எனப்படும் முத்துஸ்வாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோரை அனைவர்க்கும் மேலானவர்கள் எனலாம்.
நீங்கள் அப்படிச் சொல்வதைக் கேட்க முடியாது என்றார். இதனை தொடர்ந்து இளையராஜா தரப்பில் எல்லோருக்கும் மேலானவன் என்றது பாடல்களின் காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே என்றும் மற்றபடி அவர் தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என வாதிட்டார். வழக்கு 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.