மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோவில் அனுமதி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ
நெல்லையில் தனது சகோதரர் இல்லத்தில் தங்கி இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து, சென்னை திரும்பிய வைகோ, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு இன்று மாலை லேசான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 3 நாட்கள் வரை வைகோ மருத்துவமனையில் தங்கியிருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வைகோவை பார்பதற்காக கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் வர வேண்டாம் என மதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் பலரும் வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.