இலங்கை தமிழர் விவகாரம்; கொந்தளித்த மதிமுக - சமாளித்த திருமாவளவன்
இலங்கை தமிழர் விவகாரம் குறித்து திருமாவளவன் கூறிய கருத்து மதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இலங்கை தமிழர் விவகாரம்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தம்மை ஈழத்துக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார். மேலும், வைகோவை பிரபாகரன் அழைக்கவில்லை என்கிற தொனியில் கூறியதாக மதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
அதனைத் தொடர்ந்து, "வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் கூறியதைப் போன்று நிறுவுகிறார் திருமாவளவன். இது நியாயம்தானா?" என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமா கருத்து
இந்நிலையில், நாகர்கோவிலில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், இலங்கை தமிழர் விவகாரத்தில் மதிமுகவின் பங்கு மகத்தானது.. அதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்களின் வலிமைக்கு ஏற்ப ஈழத்தமிழர் பிரச்சினைகளில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
ஐயா நெடுமாறன், பல்வேறு பிரிவுகளாக இருக்கின்ற திராவிட கழகங்களின் தலைவர்கள் உட்பட அவரவர் பங்குக்கு அவரவர் வலிமைக்கு ஏற்ப உதவி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.