பரபரக்கும் அரசியல்...பாஜகவில் இணைந்த வைகோவின் மருமகன்

Vaiko Tamil nadu BJP K. Annamalai
By Karthick Apr 11, 2024 10:04 AM GMT
Report

வைகோவின் மருமகன் முறை உறவினரான கார்த்திகேயன் கோபாலசாமி என்பவர் இன்று தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்.

தமிழக பாஜக

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் பாஜக, அண்ணாமலையின் வருகைக்கு பிறகு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளதாக பாஜகவின் தொண்டர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vaiko-son-in-law-joins-bjp-annamalai-mdmk

ஆனாலும் தேர்தல் அரசியலில் அக்கட்சி தற்போது வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சென்னை ரோட் ஷோவில் நடந்த விபரீதம்...அதிரடி வழக்கு பதிந்த போலீஸ் - பின்னணி என்ன..?

சென்னை ரோட் ஷோவில் நடந்த விபரீதம்...அதிரடி வழக்கு பதிந்த போலீஸ் - பின்னணி என்ன..?

அதற்கான முதல் முயற்சியாக, பாஜக திராவிட கட்சிகளின் கூட்டணியில்லாமல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக, ஓபிஎஸ் அணி, அமமுக போன்ற கட்சிகளின் கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது.

வைகோ மருமகன்

அதே நேரத்தில், கட்சியை வளர்க்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றார் மாநில தலைவர் அண்ணாமலை. பல நட்சத்திரங்களையும், மாற்று கட்சி பிரபலங்களையும் தங்களது கட்சியில் இணைத்து வருகின்றார் அண்ணாமலை.

vaiko-son-in-law-joins-bjp-annamalai-mdmk

அப்படி தான் தற்போது, மதிமுக தலைவர் வைகோவின் மருமகன் உறவான கார்த்திகேயன் கோபாலசாமி மற்றும் மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.