சென்னை ரோட் ஷோவில் நடந்த விபரீதம்...அதிரடி வழக்கு பதிந்த போலீஸ் - பின்னணி என்ன..?
பிரதமர் மோடி சுமார் 1 1/2 கிலோமீட்டர் ரோட் ஷோ சென்னையில் நடத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரதமர் ரோட் ஷோ
நாட்டின் பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் பல இடங்களிலும் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், ரோட் ஷோ'வும் நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.
கடந்த 9-ஆம் தேதி இந்த ஆண்டில் 7-வது முறையாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ்.பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
வழக்குப்பதிவு
சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் கிட்டத்தட்ட சுமார் 1 1/2 கிலோமீட்டர் திறந்தவெளி வெளி வாகனத்தில் ரோட் ஷோ நடத்தியவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வழிநெடிகிலும் அவருக்கு பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பையே அளித்தனர். இந்த சூழலில் தான், சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரோட் ஷோ நடந்த போது, சென்னை தி.நகரில் தேர்தல் விதியை மீறி விளம்பர பதாகைகளை பாஜகவினர் வைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரில் மாம்பலம், பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.