மோடி சென்னை ரோட் ஷோ..கட் - அவுட் பார்த்து மடிப்பிச்சை கேட்டு அழுத மூதாட்டி..இது தான் காரணமா..?
நாட்டின் பிரதமர் மோடி நேற்று சென்னை பாண்டி பஜாரில் ரோட் ஷோ நடத்தி சென்னை பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாஜக மக்களவை தேர்தல்
10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க கடும் முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாத கூட்டணியை அமைத்துள்ள அக்கட்சி தேர்தல் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது.
நாட்டின் பிரதமர் மோடி, நேற்று 7-வது முறையாக தமிழகம் வந்தார். சென்னை பாண்டி பஜாரில் அவர், ரோட் ஷோ நடத்தி பாஜக சென்னை வேட்பாளர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ்.பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
கண்கலங்கிய மூதாட்டி
பிரதமரின் ரோட் ஷோவிற்காக பாண்டி பஜார் முழுவதும் நிறைய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் குழுமியிருந்த மக்கள் பலரும், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அந்த பேனர்களில் ஒன்றை பார்த்த மூதாட்டி ஒருவர் அணிந்திருந்த செருப்பை கழற்றி மக்கள் நடக்கும் நடைபாதையிலேயே முட்டிப்போட்டு பிரதமர் மோடியின் கட்- அவுட்டை பார்த்து கண்கலங்கிய படி ஏதோ கூறி, தனது சேலையை விரித்து மடிப்பிச்சை கேட்டார்.