விமர்சனம் வரும்படியான முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ
தேர்தல் கூட்டணியில் விமர்சனம் வரும் படியான முடிவுகளை எடுக்க மாட்டேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவையில் மதிமுகவின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மதிமுக செயலாளர் வைகோ மற்ற கட்சிகள் நிதி திரட்டும் நிலையில் தற்போது இல்லை எனவும், பணத்தை வாரி இறைக்க கூடிய நிலையில் மற்ற கட்சிகள் உள்ளதாகவும் கூறினார்.
மதிமுக மட்டுமே மக்கள் பணிக்காக நிதி திரட்டி வருவதாகவும், தேர்தல் கூட்டணியில் விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை தான் எடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தேர்தலுக்கு பின் கட்சியின் பொதுக்குழுவில் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.