மோடி குறித்த கேள்விக்கு யாரையோ பற்றி கேட்கிறீர்கள் - வைகோ ஆவேசம்

Vaiko Narendra Modi
By Thahir Sep 05, 2022 10:53 AM GMT
Report

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மரியாதை 

அவரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்தில் உள்ள வ.உ.சியின் திருவுருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வ.உ.சி-யின் உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில உ.சி.சியின் பிறந்த நாளையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

ஆவேசமடைந்த வைகோ 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், துாத்துக்குடி ஒட்டாப்பிடாரம் என்றால் மாவீரன் சிதம்பரம்பிள்ளையின் புகழ் நிலைத்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

Vaiko

பின்னர் செய்தியாளர் ஒருவர் அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆவேசமடைந்த வைகோ உயர்ந்த தலைவர் பற்றி பேசி கொண்டிருக்கும் போது நீங்கள் யாரையோ பற்றி கேட்கிறீர்கள் என பதில் அளித்தார்.